சனி, 7 ஆகஸ்ட், 2010

இனியவளே...



இனியவளே...



நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள். உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக
நீயின்றி விடியாமல்போனதடி என் இரவுகள். உன்னன்பில் அன்று -நான்வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாய் என்னுள்ளே..
மரணங்கூட வர மறுக்குதடி நினைவுகளின் தொல்லையின்றி நின்மதியாய் தூங்குவதற்கு
தொலைந்துவிட்ட சந்தோஷத்துக்காக ஏங்குதடி என்மனது.
வருவாயோ என்னுயிரே நீயில்லாமல் நின்மதியின்றி இவன்.
நெஞ்சினில் உன்னையும் விழிகளில் நீரையும் சுமந்து வாழ்கிறேன் உனக்காக

காதலி

என்னை உறுக வைதவள் - ஒருத்தி

அவள் தான் என் உயிரின் பாதி

என்னை எழுத வைதவள் -ஒருத்தி

அவள் தான் என் கவிதையின் மீதி

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

என் கனவுலகை

என் கனவுலகை சிறப்பிக்குது
உன் சித்திரங்கள்
உன் முக அழகில் நான்
முகம் துடைத்தேன்
அத்தனையும் என்
கற்பனைகளே

உன்னை பார்த்த ...

உன்னை பார்த்த ...
விநாடி முதல்.........
எழுத தொடங்கினேன் .........
கவிதையை.............
புத்தகத்தில் அல்ல...............
என் இதயத்தில்...............
காவியமாய்.........................

அவளின் ஆசைகள்

என்னை களவாடிய கள்வா
உன்னை முத்தத்தால் குளிப்பாட்டி
இரவோடு நாம் கரைந்து-நீ
என் உயிரில் உறைந்து
உன்னிடம் மௌனமாய்
உறக்கத்தில் நனைத்து
வேர்வையாய் உன்னோடு படந்து
காதலில் என்னை
கரைசேர்க்க வருவாய்-நீ

"கண்ணாடி மனது.........."

எத்தனையோ நிகழ்வுகள்
உருவாக்கியிருக்கலாம்
நம்மில் சச்சரவுகளை..............

உன்மீது நான் கொண்ட
நட்போ.............

என்மீது நீ கொண்ட
அன்போ............

எது தடுத்ததெனத்
தெரியவில்லை..............

நூலிலையில் ஊசலாடிய
நம் உறவு அறுபடாமல்...........

எதிர்பார்த்தேன்
உன் இதழ்களில்
சிறு நகையொன்றை...............

ஆனால்,
செவிவிழுந்த வார்த்தைகளோ
கல்லாகி உடைத்தெறிந்தது - "என்
கண்ணாடி மனதை.............."

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அன்பே…அன்பே..!!

அன்பே …அன்பே…அன்பே..!!
சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் சொல்வது….

உன்பெயரை தான்
சுற்றும்என் விழிகளை பார்
அதில் சுடராய்
தெரிவதும்…

உன்முகம் தான்
உயிரில்ஒலிக்கும்
என் சொல்கள்..எல்லாம்.
உன்குரல்தான்…..

பாதை இல்லா
என் பயணம் கூட உன் பார்வை பட்ட
பாதையில்தான் உறங்கும் போது….

ஓயாத உந்தன்கனவில்தான்
ஓடி கொண்டு இருக்கும்… என் இதயம்
ஓயாமல் துடிப்பதும் உயிரேஉனக்காகத்தான்….

என்னை மறந்து விடாதே..!

என் பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது…!!
சில நேரம் வெட்கப்
புன்னைகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!!!!

உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கண்ணீர் வடிக்கிறது! என் பேனா!!
சட்டையின் பையில் நீல நிறமாய்..!!!!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!!!

அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
என் இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு..!!!!
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!!!!

உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புது புது வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது…!!

வண்ணங்களை வகைப்படுத்த
நாசாவின் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!!!

வாரம் சென்ற பின்னும்
தனக்கான வரிகள் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே! என் நண்பன்..!!!!

அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி வார்த்தை கண்ணீருடன்
என்றும் “ என்னை மறந்து விடாதே “ ………..!!!!!!!

புதன், 4 ஆகஸ்ட், 2010

என் உயிரே நட்பே!

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்தபோதும்
எங்கோ ஒரு மூலையில் இருந்து
நீ என்னை நேசித்தாய்.

எனக்கு பிடித்த பொருள்கள் எல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமென
ஒரு வார்த்தை கூறினாய்

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம்...
ஆனால் நான் கேட்காமலே,
கிடைத்த உறவு நீ மட்டும் தான்
என் உயிரே நட்பே!

என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு.
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது எவ்வாறு என்பதை...!!!

என்னவளின் அழகு

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று
விடுகிறாய்?’ என்றா
கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு
பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்

பட்டுப்பூச்சி

சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!

இதயத்தின் திறவுகோல்

இதயம்தனை நீ திறந்திடுக
அன்பென்னும் திறவுகோல் கொண்டு – அதில்
இசைதனை மீட்டிடுக
பாசமென்னும் யாழ் கொண்டு

உணர்ந்திடுவாய் அப்போது
உன் இதயம் மீட்டும் இனிய இசை
அன்பே உன் இதயத்தின்
திறவுகோல் மறந்திடாதே எப்போதும்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

கிழிக்க இயலாத உன் நினைவுகள் !!!!!!!!!!!!!!!!!

உன்னிடம் சொல்ல மறந்த வார்த்தைகளை இன்று என் ...
பேனாவால் கவிதைகளாக
எழுதி கிழிக்கிறேன் .........

ஆனால்

உன்னிடம் சொல்லி
மறந்த வார்த்தைகளை
மட்டும்
என் பேனா
எழுதிக் கிழிக்க மறுப்பதேன் ..?/

வேறொன்றும் இல்லை
உன் நினைவுகள் தானடி
அந்த கிழிக்க முடியா
வார்த்தைகள் .......

நான் விரும்பும் மரணம்


ஒரு நொடி

மரணத்தை விட .

உன்னால்

ஒவ்வொரு நொடியும்

சாகடிக்கப்படுவதையே

மிகவும் விரும்புகிறேன் ....!!!

தனிமையை !!!!


தனிமையை

உணர்ந்ததில்லை கண்ணே..

உன் நினைவுகள்

எப்போதும் என்னை ...

தலைகோதி யும் தவுவிக்கொண்டும்

இருப்பதால் ............

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!



நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்கமறுக்கின்றேன் ..??

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்க மறுக்கின்றேன் ..??

நீ பார்க்க மறுக்கையில் ஏனோ பக்தன் ஆகின்றேன் ..??

உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கின்றேன் ..??

நீ ஒரு வார்த்தைபேசினால் ஏனோ உலகை மறக்கின்றேன் ..??

உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ..??

உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன்..??

நீ புருவம் சுழித்தால் ஏனோ அவற்றைக் திறந்து விடுகிறேன் ..???

நிலா


நிலாவே...! கலங்காதே


நீ மிக தூரத்தில் இருப்பதால்


நீ சிந்தும் கண்ணீர் கூட


எனக்கு தெரிவதில்லையே.......!!!!