வியாழன், 29 ஜூலை, 2010

சலனம்

என் பெயரை அழைத்தல்
என் தலை மட்டுமே
திரும்பி பார்க்கும் ..!
ஆனால்

உன் பெயரை அழைத்தல்
என் உள்ளமும் அல்லவா
திரும்பி பார்க்கிறது ..!

தேவதை

கவிதை வரிகளில் பார்க்கிறேன்
ஒரு சொல் கவிதை
உன் பெயர் ........!!

நகைகளில் தேடிப்பார்க்கிறேன்
புதிதாய் பூத்த ஒருநகை
உன் புன்னகை .....!!


வைரம் ஒளிர்வதை பார்க்கிறேன்
வசந்தம் விசிடும்
உன் விழிகள்....!!

அழகிய பூவை பார்க்கிறேன்
அதிலே தெரிவது
உன் முகம் ....!!
உன் காலடித்தடங்களை சேர்க்கிறேன்
அதிலே தெரியுது
என் வழி ...!!

என்னில் உன்னைப் பார்க்கிறேன்
உன்னில் தெரியுது
என் உயிர்...!!

செவ்வாய், 27 ஜூலை, 2010

சர்வதிகாரி


அன்பே நீ

ஒன்றும் அறிய சாது ..!

ஆனால்

உன் அழகு அப்படியில்லை

அது சர்வதிகாரி ..!

வேண்டுமானால்

என் மனதினை கேட்டுப்பார்

உன் அழகு செய்யும் அட்டுலியங்கள்

அப்போதுதான் உனக்கு தெரியும் ...!

தெரியாது


எனக்கு கவிதைகள்

எழுத மட்டுமே தெரியும் .....!


உன்னைப்போல் வாசித்து

உஜிர் பெற வைக்க தெரியாது ....!

கண்கள்


முகத்தை முடி என்ன பயன்

அதன் மொத்த அழகையும்

காட்டிக் கொடுத்து விட்டதே

உன் கண்கள் .........

வெக்கம்


வெக்கம் சிந்தும் பார்வை

நகை கடிக்கும் பற்கள்

மனதை மயக்கும் தாவணி

நீ அப்படியேதான் இருக்கின்றாய் ..!

ஜந்து வருட இத்தாலி வாழ்க்கையில்

நான் தான் மாறிவிட்டேன் ...!!

ரோஜா


ஒற்றை சிகப்பு ரோஜாவை

கையில் வைத்துக்கொண்டு

பூ பிடித்திருக்கின்றதா என்றாய்

ஆம் ரோஜாவை இன்னொரு பூ

பிடித்திருக்கின்றது என்றேன்

வெக்கத்தால் நீ சிவக்கத் தொடங்கினாய்!


இல்லை இல்லை

ஒரு ரோஜாவை இன்னோர் ரோஜா

பிடித்திருக்கின்றது என்றேன் .........

திங்கள், 26 ஜூலை, 2010

அவளுடையது


என்னவள் வெட்டியெறிந்த

கட்டை விரல் நகம் தான்-வானிலே

வட்ட நிலவாக

வளர்ந்து நிக்கிறது......


என்னவளின்

எச்சில் துளிகள் தான்

வானில் மின்னுகின்ற

நச்சதிரங்கள் .........

கண்டு கொண்டேன்


காயம் இல்லாமல் வலிக்கும்

என்பதை உன்னை .......

காதலித்த பின்பு தான்

கண்டு கொன்டேன்

வலிகள் கூட இனிக்கும்

என்பதையும் உன்னை .....

காதலித்த பின்பு தான்

கண்டு கொண்டேன்

**((சாம் ))**

ஞாயிறு, 25 ஜூலை, 2010

காதல் கைதி,,,,,,,,,


அன்பே உன் இதயம்

பூட்டி வைத்த சிறைச்சாலை

என்று சொன்னாயே.........


காதலெனும் குற்றம் புரிந்து

வந்துள்ளேன் .........

ஏற்ருக்கொள்வயா என்னை

ஆயுள் தண்டனைக் கைதியாக.,...

**(( சாம் ))**

கண்ணீர் பரிசு,,,,,,,


விழிகளில் நீர் எதற்கடி

பெண்ணே .....

உன் புன்னகையை

திருடி சென்றவனுக்கு ,,,,

உன் கண்ணீரை

பரிசளிக்கின்றாயா......

சுமைகள்


என் கண்களுக்கு பார்வை கூட

சுமை தான் ............

உன்னைக் காணும் வரை ........!

நிழற்படம் தேய்ந்து போகிறது

என் கை ரேகைகளோடு .........!


நிஜமாக நீ என் முன் வந்து விடு

இணை சேர காத்திருக்கிறது

என் ஜீவன்.................

*****((இனியவன் சாம் ))******

ஒடோடி வா

என் இமைகள் உறங்கிய போது கூட
உன் நினைவுகள் உறங்கவில்லை,,...!

என்னையே நான் மறந்த போது கூட

உன்னை நான் மறக்கவில்ல ........!

அன்பே

ஏன் இந்த நிசப்தம்

துடிக்கும் என் இதயம்

நிற்கும் முன் என்னிடம்

ஒடோடி வா.............!

கண்ணே ...........!

ஒற்றை வரியில்


பக்கம் பக்கமாய்
கவிதை எழுத தெரிந்த
எனக்கு ..
ஒற்றை வரியில் சொல்ல
முடிய வில்லை
உன் அழகை

உனைப்போல்


எல்லாக் கவிதைகளும்

உன்னைப் பற்றியவை

தானேனிலும் ......

ஒரு கவிதைகளும்

உன்னைப் போல்

இல்லையே..............

காத்திருக்கிறேன்

பல கோடி ஆசைகளை அள்ளிக்கொண்டு
உன் இதய வாசலில் காத்திருக்கேன் .......

உன் இதயக் கதவு இரும்பாலான என்ன
துரும்பாலான என்ன ....................

என் ஆசைகளை நீ
அள்ளி செல்லும் வரை

மரண வாசலையும் ஏதிர் கொண்டு
பூத்திருப்பேன் அன்பே.............