சனி, 24 ஜூலை, 2010

உன் நினைவாக மட்டும்,,,,,,,,,

நிலவாக நீ .........
உன் நினைவாக நான் .....

எட்டிதொட முடியாத

தொலைவில் நீ இருந்தாலும் /...........

உன் பின்பத்தை அள்ளி

ரசித்துக்கொட்டிருப்போன்........

ஒவ்வொரு இரவுகளிலும்.......

**((சாம் ))**

அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,


தொடுவான தூரமெங்கும்
என்னில் தொலைக்க முடியாத
அவள் நினைவுகள் ............

அலை கடல்போல்
மலர்கள் மலர்திருந்தாலும்,,,,

வாசம் இல்லை என் சுவாசத்திலே ....
பகலிரவாய் தேடுகிறேன்
என்னவள் பின்பங்களை.....

அதோ தெரிகிறாள்தேவதை..

அந்திசாயும் நேரத்தில் ...

கையில் ஒற்றை பூவோடு ...

என் நினைவுகளை மட்டும்

சுமந்து கொண்டு .........






காதல் வானிலே


சுகந்திர பறவையாய்

நான் பறந்து மகிழ்கின்றேன்

நம் காதல் வானிலே

என் சிறகுகளில்

சுமக்கின்றேன்

உன் நினைவுகளை மட்டும் .........!

கவிதை வேண்டும்


காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி ..........

உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி ....

காதல் வேணுமா ?கவிதை வேணுமா ?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்

"கவிதை தான் வேணும் எனக்கு "
என் கவிதை நீ தானடி ........

தவிக்கவிட்டு...!


நினைவுகளை மட்டும் எனக்கு

சொந்தமாக்கி விட்டு

எங்கே சென்றாய்

என்னை தவிக்க விட்டு ........!

உன் காதலை


என்னவளே உன் மெளனம்தான்
என் சங்கீதம்.......
நீ பேசும் வார்த்தைகளே
என் வேதம் .....

நான் கண்ட ஆழகான
ஒவியம் உன் பாதம்

உன் காதலை
என் காதில்
சொல் தினம் தினம்

கண்டதும் காதல்


நீ பேசுமுன்

உன் கண்கள்

பேசின..........

செவ்வாய், 20 ஜூலை, 2010

மெளனம்

பக்கம் பக்கமாய்
பேச நினைக்கிறேன்
ஆனால் உன்னிடம்
பேசும் போது மட்டும்
என்

மெளனம் முந்திக்
கொள்கிறது

" உன்னை பிரிகையில் "


மணிக் கணக்கில்
பேசினாலும்
ஏதோ ஒரு வித
வறச்சி உள்ளே ...........


கொட்டும் மழையிலும்
நனையாத குடையின்
உட்புறம் போல.............

"உன்னை பிரிகையில் "



சாம்

திங்கள், 19 ஜூலை, 2010

காதல் மலர்



மலர்கள் ஒரு நாளைக்கு

ஒருமுறை தான் பூக்கிறது

ஆனால் நீயே நெடிக்கொருமுறை

என் மனதில் பூத்துக்

கொண்டிகிறாய்

இதே நிலை தொடர்ந்தால்

என் மனதில் உன்

வாசம் மட்டுமே வீசும்

மயக்கியவள்


மனதில் தந்திரம்
போட்டு என்னை
அழைத்தாய்
வெக்கத்தில்!!!!
கண்ணில் மந்திரம்
போட்டு என்னை
தள்ளினாய்
சொர்க்கத்தில்!!!!!!!
******(((சாம்)))******

புதுக்கோலம்

என்னவளே
அன்று வாசலில்
கோலம் போட்டாய்
அது இன்று வரை
கலையவில்லை
ஆம் !!!
நீ போட்டது
என் இதய வாசலில் ................
**((சாம்))**

அழகின் அர்த்தம்


உன்னை ...
தாவணியில் பார்த்த போதுதான்
அழகின் அர்த்தம்
புரிந்தது
அதில் எழுத்தின்
வடிவமும்
தெரிந்தது !!!!...............
**((சாம்))**

இதயத் துடிப்பு


உன்னை நான்
இதயத்தில்
வைத்திருப்பதால் தான் .....
உன்னை தாலாட்டும்
விதமாய் இதயம்,
துடித்துக்கொண்டிருக்கு.......
**((சாம்))**

ஞாயிறு, 18 ஜூலை, 2010

என்னவள்


மருத்துவர் கூறினார்
என் இதயத்தில்
துவாரம் என்று !!!!!
அவர்கட்கு எப்படி
தெரியும்????
அது என்னவள்
புகுந்த வழி
என்று!!!!!!
**((சாம்))**

இமைக்கதவு காதல்..


விழியின் தேடல் விடியும்..
விடிந்த பின்பும்
விடியாமல்
மூடும் இமைகதவு
காதல்................
***((சாம்))***

நிலா


நிலவை
காதலிக்கும்
ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒரு நட்சத்திரம்........
***((சாம்))***

மின்னல்

உன்
பார்வையை
மின்னல் என்றேனே
ஒப்புக்கொண்டைய
இப்போது பார்
வெட்டி விட்டது
என் இதயத்தை!!!!
*(((சாம்)))**

என் காதல்...!


இது வரை நான் சொன்ன வார்த்தைகளில் மட்டுமில்லை , இன்னும்!!!!!
நான்
சொல்லபோகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கு என்
காதல்!!!