நட்பு




என் இனிய தோழி



என் இனிய தோழி
என் பூமி
இன்பமாய் நனையும்
அழகிய மழை - நீ

.என் வானம்
அழகுற தோன்றும்
அழகிய வானவில் – நீ

என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ

என் இமைகள்
அசையாமல் ரசிக்கும்
அழகிய ஓவியம் – நீ
என் நெஞ்சை

இதமாய் வருடும்
அழகிய தென்றல் – நீ
என் இறுதி வரை

என்னுடன் தொடரும்
அழகிய உயிர் – நீ
என்றும்

என்னுள்ளே நிலைத்திருக்கும்
என் இனிய தோழி – நீ





என் தோழி*







கடல் போன்ற



எனது நெஞ்சத்தில்



நட்பைத் தேடி



...தத்தளிக்கும் எ‌ன்



மனக் கப்பலுக்கு



கலங்கரை விளக்கமாய்



எ‌ன் உயிர் தோழி நீ ........





தோழா



சிறு வயதிலே



கை பிடித்த தோழா...!







வாழும் நாள் வரையில்



என்னுடனே வாடா...!



...



இலட்சியத்தை ஒன்றாக கொண்ட



என்னுயிர் தோழா..!







அலட்சியத்தை ஒன்றாக



வெல்வோம் வாடா...!







சிறுபிள்ளைத்தனமாக தானே



எப்போதும் நடப்பாய்..!







சிறகொன்று முளைத்ததை போல்



துள்ளி நீ குதிப்பாய்...!







தகராறு என்றாலே தள்ளி



நீ நடப்பாய்...!







"பிகர்"ஆறு என்றாலே அதில்



தோனியாய் மிதப்பாய்...!







சிந்தனைகளில் சினேகனையும்



மிஞ்சி விடுவாய்..!







வரிகளிலே வைரமுத்துவை



கொஞ்சி விடுவாய்...!







கவிதைகளில் கபிலனையும்



எஞ்சி விடுவாய்...!







அழகே உன்னிடம் தான்



இலக்கணம் படிக்கும்...!







உன்னை பார்த்த மற்றவருக்கு



தலைக்கணம் பிடிக்கும்...!







உன் பெற்றோருக்கு முதல் மகனாக



பிறந்தவனே...!







தமிழ் கற்றோருக்கெல்லாம் தலை



மகனாவது எப்போதடா...!



நண்பனே...!




நட்பு

நான்

தொலைவில்

இருந்ததாலும்

உன்னை ...

நினைத்தால் தான்

நாட்கள்

இனிமையகிறது



உதடுகள் மட்டுமே

உன்னை வெறுப்பேற்றும்

என் - இதயமல்ல !




அழகிய நட்பு !!!



அழுதவுடன் அரவணைக்கும்



அன்னையிடம் ஆரம்பிக்கும்



அந்த அழகிய நட்பு !!!







ஆள் கொஞ்சம் வளர்ந்திடவே



...ஆடாத ஆட்டம் ஆட



ஆள்சேர்த்து ஆர்பரிக்கும்



ஆண்களின் நட்பு !!!







இவன் வீட்டு சாப்பாடு



இனம் விட்டு இடம் மாறி



இளம் சிட்டாய் இவ்வுலகையே



இரண்டக்கிடுமே இந்த நட்பு !!!







ஈயாய் ஒற்றிக்கொள்வோம்



ஈருயிராய் வாழ்ந்திடுவோம்



உள்ளதெல்லாம் செலவழிப்போம்



ஊரு ஊராய் சுற்றிடுவோம் !!!







எந்த ஜாதியும் அறியமாட்டோம்



ஏழை ஏக்கமமும் உணரமாட்டோம்



ஐந்து விரலாய் உதவிக்கொள்வோம்



ஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் !!!







ஓரிடத்தில் இல்லா விட்டாலும்



ஓருயிராய் நினைவு கொள்வோம்



ஓளவை வயது வரை ஒற்றுமையாய்



உலகை அளப்போம் !!!!




உன் இதய வானில்
                                                                
தோழியே,

உன் இதயவானில்

சிறகடித்துப் பறக்கவே

இந்த அன்புப் பறவை

ஆசைப்படுகிறது...



நீ - உன் மனவெறுப்புகளால்

என் சிறகுகளை

சிதைத்துவிடாதே...



உன் புன்னகையை

எதிர்பார்த்துதான்- இந்த

அன்புப்பறவை காத்திருக்கிறது...



நீ- மௌனங்களால்

இருட்டடைப்பு

செய்துவிடாதே...



எத்தனையோ

அவஸ்த்தைகளின்

அஸ்தமனத்தில் - கூட



உன்னை

நினைக்கும் போதுதான்

தோழமையே எனக்கு

நிஜமாகத் தெரிகிறது...



சுகமான ராகங்களை

மீட்டித்தருவாயென்ற

நம்பிக்கையில் தான்



"என் இதய வீணை"யை

உன் பார்வை விரல்களுக்கு

அனுப்பியுள்ளேன்...



ஏமாற்றங்க்களை மட்டும்

எனது முகவரிக்கு

என்றும் அனுப்பிவிடாதே

****************************************************************************************

  
                                

        




            என்றென்றும் மரணமில்லை...!


கண்ணோடு காட்சிகளாகவும்

கனவோடு நிறமாகவும்

வரமாக வந்து கிடைத்த - என்

அன்பான நண்பர்களே...!



நம்முள் நாமே அழிந்தாலும்

நாமாகப் பிரிந்தாலும்

நமது நட்புக்கு மட்டும்

என்றென்றும் மரணமில்லை...!




***************************************************************************************************
உன் நட்பும்


சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..!
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..!


இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!


இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !


சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு
நம்முள் அரங்கேறியது !!!


எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!


எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!


வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !


சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !


நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...


உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!









***********************************************************************************  

                     தோழியே


தோழியே
உன்னை போல் ஒருவரும்இல்லை
சொல்லி சொல்லி மகிழ்ந்தேன்....
உன் கஷ்டத்தை பார்த்து
துடித்து ஓடோடி வந்தேன்


உதவி என்று சொல் வரும் முன்னே
உதவி செய்தே பழகி போனேன்..
கழுத்தை நெரிக்கும் துயரம்
என் மனதை வருத்த
ஆறுதல் தேடி அலைந்தேன்...




உதவி கரம் நீட்டும் முன்னே
என் கரத்தை தட்டிவிட்டாயே...
பாசத்தால் மட்டுமே பழகினாய்
எப்படி இன்று வேஷம் போட துணிந்தாய்




என் கவிதைகளின் ரசிகை நீ
எனக்கு தெரியும்
நான் இல்லாத நேரங்களில்
                                                                        மகிழ்ந்து இருக்கிறேன்
                                                                        உன் ரசனையை எண்ணி






இன்றோ
உன் கைபேசி அழைப்புக்காக காத்திருந்து வாடி போனேன்..
உன்னிடம் நான்
எதிர்பார்த்தது உன் பணத்தை அல்ல
என் பணம் என்று பிரித்து பேசி பழகியது இல்லை நான்...






நான் துன்பபட்டலும்
நலமாய் வாழ்..
என் சிநிகிதியே
உன் பாசத்தை
உணர்த்திவிட்டாய்... நன்றியே...
என்றும் உனக்கு நன்றியே
sam
**********************************************************************************

                     என் நண்பனே


என் நண்பனே   


என் உயிர் தோழனே


கனவோடு மட்டும்
 கை கோர்த்து நடந்தேன்


கனவில்லை இது என்று


கண்முன்னே உறவு தந்து


கை தூக்கிய என் உயிர் தோழனே


வந்த வழியே சென்ற பாசமும்


சென்ற இடம் தெரியாத நேசமும்


உன் உருவிலும்
 உன் பேச்சிலும் காண்கிறேன்


என் முகவரி கூட
உனக்கு தெரியவில்லை


என் பெயர் எது தான் என்று


தேடலில் நீயும் தொடங்கவில்லை


தூக்கத்தை நான் மறந்தாலும்


உன் உதட்டின் பேச்சினில்
மாறுப் பேதும் சொல்லாமல்


துயில் செல்வேன் நான் இங்கே


பசிதனை நான் மறந்தாலும்


உன் குரல் சொல்லும் சொல்லில்


பசியாற அமர்கின்றேன்


தனி உன் பேச்சுக்கு
நான் என் மசிக்கின்றேன்


இது தான் நண்பா நட்பு


இது தான் உன் மீது
 நான் கொண்ட சிநேகம்






***********************************************************************************

                     என் செல்ல தோழனே...!


தோழனே தோழனே  

வசை பாடாதே
மற்றவரை குறை
கூறுவதை நிறுத்தி கொள்...


ஏன்
தோற்றாய்
எதுக்காக தோற்றாய்

உன்
அன்னையிடம்
அன்பில்லையா?


யாரோ
ஒருவரிடம்
அன்பை எதிர்பார்த்து


ஏன்
புலம்புகிறாய்...
வேண்டாம்
நிலையற்ற
வாழ்க்கை

உன் இலட்சியத்தை
மட்டும்
கருத்தில் கொள்
என் தோழனே...


அன்னை
மடி போதும்
தோழனே..



இந்த உலகை ஆழ
என் செல்ல தோழனே...










************************************************************************************                
                        நட்பு


போ என்று சொன்னாலும் 



உன் நிழல்


உன்னை விட்டு போகாது


அது போன்றது தான்


என் நட்பு ...
ஆனால் என் நட்பு


நிழல் அல்ல நிஜம்
                                            ***சாம் ***

*******************§§§§§§§§§§§§§§§§§§§§§§§****************************************
                   

              "சிறந்த நம்பிக்கையுடன்..."


சாவியில்லா பூட்டில்லை...   



தீர்வில்லா பிரச்சனைகளைத்


தருவதில்லை கடவுளும்...






ஆகவே நண்பனே.


பிரச்சனைகளை எதிர்கொள்


"சிறந்த நம்பிக்கையுடன்..."








  **********புது ஜென்மம்**********



உலமெல்லாம்                               

உதிர்ந்துகொண்டிருக்கும்
பூக்களுக்கு புத்துயிர் தர
வழி தேடுகிறேன்

நீ உதவினால்
உன் பாதம்
பதிந்த பள்ளங்களில்


அவை புது ஜென்மம்
புனையுமடி என் தோழி !
                  
                   **((சாம்))**


**********************************************************************************



                 "நம் நட்பு..."

 எழுதப்படாத கவிதை ...    


வரையப்படாத ஓவியம் ...

தீண்டப்படாத நிலவு ...

மீட்டப்படாத இசை ...

தொடமுடியாத வானம் ...

......இவற்றைப் போல

உயர்ந்ததுதான்

"நம்  நட்பு..."
((((((((((((சாம்))))))))))))))














 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 


********எங்கள் நட்பு...**********




திடீரெனத் தோன்றும்  



மின்னலும் இடியுமல்ல
எங்கள் நட்பு...


அந்த, ...


"வானத்தைப் போல"


நிலைத்து நிற்கும்


என்றைக்கும்...







***********************************************************************************
             இன்று வரை..?      

                                               
எனக்கான பக்கம்                               



ஒதுக்கப்படவில்லை


உன் நினைவுப்(ஆட்டோகிராப்)


புத்தகத்தில்...


அதுபோலவே,

உன் மனதிலும்


நம் நட்புக்கான இடம்


ஒதுக்கப்படவில்லையோ


இன்று வரை..?
          
                          
 
 
                                                     ****(((சாம் )))****


*******************************************
***தோழி ***


தோழி உன் கை பற்றி

  
 ஊர் சுற்றித்திரிந்த
    
  அந்த நாட்கள்
  
 என் காதலியுடன்

சுற்றி திரியும் போது

நினைவில் வருகிறது .....

அந்த பசுமையான நாட்களை
   
   மீட்டிப் பார்க்க

 என் உஜிர் தோழி _நீ

என்னருகில் இல்லையே!!!!!!!!

*******************************************************************************
**அழகான தோழி**
அழகான பெண்களை
   
   கண்டால் காதலிக்க

இஸ்டம் இல்லை 

  ஏதோ  செய்து விட்டாள் 

என்  தோழி ................
                                    சாம்


                                                                                                                               








**********************************************************************************

               *** நட்பு ***
                                       ..............................
ஒரு                                 



நட்பின் புன்னகைக்கு


உதடுகள்


தேவையில்லை


இதயம் போதுமே!!!
 
 
 
***********************************************************************************
       ***தோழி *****
 
கவிதை எழுத்து
ஆசை என்றேன்
காதலித்துப்பார்!!!!!!!!!!!!
கவிதை வரும்  என்கிறார்கள்
 
 
வார்த்தைகளை மாற்றி
போடு கவி வரும்
என்றாள் என்
உஜிர் தோழி
என்றென்றும் மரணமில்லை...!

கண்ணோடு காட்சிகளாகவும்

கனவோடு நிறமாகவும்

வரமாக வந்து கிடைத்த - என்

அன்பான நண்பர்களே...!



நம்முள் நாமே அழிந்தாலும்

நாமாகப் பிரிந்தாலும்

நமது நட்புக்கு மட்டும்

என்றென்றும் மரணமில்லை...!
என்றென்றும் மரணமில்லை...!

கண்ணோடு காட்சிகளாகவும்

கனவோடு நிறமாகவும்

வரமாக வந்து கிடைத்த - என்

அன்பான நண்பர்களே...!



நம்முள் நாமே அழிந்தாலும்

நாமாகப் பிரிந்தாலும்

நமது நட்புக்கு மட்டும்

என்றென்றும் மரணமில்லை...!

உன் இதய வானில்
அழகிய நட்பு !!!

கருத்துகள் இல்லை: