எத்தனையோ நிகழ்வுகள்
உருவாக்கியிருக்கலாம்
நம்மில் சச்சரவுகளை..............
உன்மீது நான் கொண்ட
நட்போ.............
என்மீது நீ கொண்ட
அன்போ............
எது தடுத்ததெனத்
தெரியவில்லை..............
நூலிலையில் ஊசலாடிய
நம் உறவு அறுபடாமல்...........
எதிர்பார்த்தேன்
உன் இதழ்களில்
சிறு நகையொன்றை...............
ஆனால்,
செவிவிழுந்த வார்த்தைகளோ
கல்லாகி உடைத்தெறிந்தது - "என்
கண்ணாடி மனதை.............."