காதல்


வாழ்க்கைஓர் அமுத மழை


நனைந்து பார்


அதன்


சுகம் புரியும் உனக்கு.


* * * * *


நீ வரும்வரை


என்னை


எவரும் கவனிப்பதில்லை


உன்னோடு இருக்கையில்


கவனிக்காததென்று எதுவும் இல்லை


அதற்காகவாவது


உன்னோடு கூட வரலாம் நான
* * * * *
காதலை விட காதலர்களே
உனை
அதிகமாய்
நினைவு படுத்துகிறார்கள்


* * * *
நீவாசிக்கிறாயோ இல்லையோ உன்னால்


பலர்


வாசிக்கிறார்கள் என்


கவிதைகளை


* * * *

தயவு செய்து சிரித்துவிடாதே


கலைந்து கிடக்கும்


என் எழுத்துக்கள்


இன்னும் கலைந்துவிடும்



* * * *

யாரிடமும்

சொல்லாதே

உனக்கு மட்டும் ஒர் ரகஸ்யம்.

நேற்று இரவு என் கனவில்

நீ...


******


ஒரு நொடி


மரணத்தை விட...


உன்னல்


ஒவ்வொரு நிமிடமும்


சாகடிக்க படுவதை விரும்புகிறேன்...



*******

நண்பனாக பழக இனிமையானவன் ,........

தனிமையில் இதயம்,.......

காலங்களின் நெற்றியில் பொட்டு வைக்கிறேன்,.! -

ஆம் என்னுயிரைப் பிழிந்து கவிதை வடிக்கிறேன்,.!

- என் கவிதைகளின் உயிர் நீ

உனது தேடல் நான்



* * * * *

காற்றில்

உன்

துப்பட்டாவின் ஒரு முனை

கவிதை எழுதுகிறது....

மறு முனை ஓவியம் வரைகிறது.....

கவிதைக்கும் ஓவியதிற்கும்

நடுவிலேயே நடந்து செல்கிறாய்

நீ


* * * *
மனிதர்கள் யாருமற்ற


கோள் ஒன்றிற்கு சென்றுவிடலாமா


என்று கேட்டாய்


இப்பொழுது பூமியில்


நம்மைத் தவிர வேறு


யார் இருக்கிறார்கள் என்றேன்....



* * * * *
உன் இதயக்


குளத்தில் கல்லெறிந்தவர்கள்


பலராக இருக்கலாம்!


ஆனால்


இதயத்தையே எறிந்தவன்


நான் மட்டும் தான்!s
* * * * *

நிறைவேறாக் காதலால்


நாம் விடும் வெப்பப் பெருமூச்சு


வான்வெளியில் கலக்கட்டும்.


வெற்றிகண்ட காதலர்களின்


குளிர் சுவாசங்களால்


அது பெருமழையாகி


பூமியாவது செழிக்கட்டும் நம்மால்!







* * * * *









கவிதை - தபால் துறைக்கு அனுப்ப படாத கடிதம் !

காதல் கவிதை - ஏச்சில் தபால் தலை ஒட்டப்படாமல்

வெறும் ஏச்சம் மட்டும் இருக்கும் கடிதம் !!



* * * * *
உன் பெயரை
நீ


உச்சரிக்கும் போது


மெய் எழுத்துக்களும்


உயிர் கொண்டது !


உயிர் மெய் எழுத்துக்களும்


வாழத் தொடங்கியது...!!





* * * * *





என் கோபங்கள்

எப்பொழுதுமே

நீ

செய்யும் தவறுகளுக்காக அல்ல...

உன்

சமாதான பேச்சுகளுக்கும்

கெஞ்சல் வார்த்தைகளுக்கும்

தான்









* * * * *





இருபத்தி நான்கு மணி நேரமும்

இரவுபகலாய் இருந்தாலும்

வாழ்வதற்கு நான் தயார்,

அத்தனை இரவுகளிலும்

கனவுகளில் நீ

வருவதாய் இருந்தால்...









* * * * *





வாழ்க்கையின் ரகசியம் புகைபோல்

நம்முள் கசிந்து கொண்டிருக்கிறது

நறுமணமாய் உணருபவன் துன்பத்திற்காய்

கவலைப்படுவதில்லை துர்மணமாய் உணருபவன்

இன்பத்தையும் அனுபவிப்பதில்லை

ஆனால்

மணங்களின் கலவையாய்

கசிந்து கொண்டேயிருக்கிறது ரகசியம்



* * * * *









வரும் வழியோரம்

இதழ்

விரித்தாய் சிறு பூவாய்..

மயங்கி விட்டேனடி

அன்பே

மது உண்ட

சிறு வண்டாய்

உன் மடியில்





தொலையும் உயிர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சிறிய சந்திப்பில் நம் மகிழ்ச்சி,,,,,,,,



சிறிய புன்னகையில் நம் கனவுகள்,,,,,,,


சிறிய கோவத்தில் வந்த சண்டைகள்,,,,,,,,


சிறிய எதிர்பார்ப்பில் சில தோல்விகள் ,,,,,,,,,,


சிறிய ஊடல்களில் நம் தாபங்கள்,,,,,,


இவையெல்லாம் நம் உறவில் நான் கண்டு ரசித்தவை,,,,,,,


ஆனால்,,,,,,


சிறிய பிரிவு கூட நம்மிடத்தில் வேண்டாம் அன்பே,,,,,,,,,


உன் பிரிவை தாங்காமல் என் உயிரும் சிறிதாகி தொலைந்து போகுமே........
அவள் சுவாசம்,,,,,,,,,,,,

காற்றே


என் அருகில் தான் அவன் இல்லை

அவன் விடும் மூச்சுக் காற்றையாவது

என் அருகில் கொண்டுவா,,,,

என் நெஞ்சம் உயிராக அதை

சுமந்து கொள்ளட்டும்,,,,,
உன்னில் என் அன்பு,,,,,,,,

அன்பே 



என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை


காதலைவிட மேலான அன்பை கொண்டு எழுதுகிறேன்,,,,


வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்,,,,,,,,,


என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்,,,,,,,


எழுதிய கவிதையை மறந்து விடாதே...,,,,,,,,


என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை


உதறி விடாதே,,,,,,

தேடல்

கருவிழி ஓரத்தில் ஒரு தேடல் இருந்தது,,,,,



தேடலின் நோக்கம் தெரியவில்லை,,,,,


என் தேடலில் வெளிச்சமாய் நீ வந்தாய்,,,,,,,,


ஆனால் இமைத்த விழி திறப்பதட்குள்


நீ மறைந்து போனாயே,,,,,,,,,,,,,!!!


பனி மூட்டம் உன்னை மறைத்திருக்கலாம்,,,,,,,,,,,,


ஆனால் என் விழியில் பதிந்த உன் பிம்பங்கள்


என்றுமே நான் இமைக்காமல் தேடும்


தேடல்கள்தான் என்னவளே,,,,,


மீண்டும் காத்திருக்கிறேன் உன் அடுத்த வரவுக்காக,,,,,,,


வருவாயா நீ என் வாசல் தேடி,,,,,???

************************************************************************************



இளையவனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,



வானமாய் நீ இருக்க



உன்னுள் தோன்றிய நிலவுதான் நான்,,,,,,,,,,,,,,,,,,,,



உனக்காகவே பிறையாய் சிரிக்கிறேன்,,,,,,,,,,



உன் அன்பில் உருகி தேய்பிறையாகிறேன் ,,,,,,,,,,,



நீ அருகிலிருப்பதால் பௌர்ணமியாகிறேன் ,,,,,,,,,,,,,,,



என்னவனே ,,,,,,,,,,,,,,



எனக்கு மட்டும் வானமாய் இரு,,,,,,,,,,,,,,,



என்றென்றும் உனக்குள் மட்டும் தோன்றி,,,,,,,,,,



உன்னுள்ளே தொலையும் நிலவு நான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

காதலின் அவதாரம்


இருவிழி இமைகள் ஒன்றையொன்று
சந்தித்து கொள்ளும் போது
விழியவதராம்....!

ஒருவரை ஒருவர் பற்றி இருவரும்
தெரிந்து கொள்ளும் போது
அறிமுகவதராம்...!


இரு மனதும் ஒருமித்த கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் போது
மனதவதராம்...!

இரு இதயங்கள் ஒன்றாய் சேர்ந்து
ஒன்றாக துடிக்கும் போது
இதயவதராம்... !


இனிக்கும் புன்னகை இருவரது
இதழ்களிலும் தெறிக்கும் போது
இதழவதராம்... !


இருவரது இதழ்களும் திறக்க வழியில்லாமல்
மௌனம் சாதிக்கும் போது
மௌனவதராம்...!


இதழ் கடந்து பிறக்கும் சொற்கள்
வெளிவரும் போது
சொல்லவதராம்...!

நன்கு கைகளும் இருபது விரல்களும்
இணையும் போது
கையவதராம்...!

இரு உடல்கள் இணைந்து ஓர்
உயிராய் மலரும் போது
உயிரவதராம்...!

இந்த காதல் மரணத்தை கூட
தாண்டி வாழும்
மரணவதராம்...!




சொல் பெண்ணே!


என் காதலை உன்னிடம்

எப்படிச் சொல்வது?



காதலுடன் பேசக்

காட்டாற்று வெள்ளமாய்க்

கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்

கண்களைக் கண்டதும் கானலாகின.



சொல்ல நினைத்துத் துடித்தவை

சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.



ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்

ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.



கண்டவுடன்

கதவுக்குப் பின் மறையும் உன்னைக்

காண மனது துடித்தாலும்

பண்பாடு தடுக்கிறது;

என் பாடு சொல்ல வழியில்லையே?



சொல் பெண்ணே!

என் காதலை உன்னிடம்

எப்படிச் சொலவது


உன்னை பார்த்த நாள் முதல்
*************************************************************


* உன்னை பார்த்த நாள் முதல்,          


தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு


கவிதை எழுதுகிறேன்!




* உன்னை ரசித்த நாள் ...முதல்,


உன் உருவம் மனங்கண்டு


தனியே பேசுகிறேன்!






* உன்னில் மயங்கிய நாள் முதல்,


விளங்காத ஓர் உணர்வுக்கு


விளக்கம் தேடுகிறேன்!



* உன்னை காதலித்த நாள் முதல்,


ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்


சுமை தெரியாமல்!
*****************************************
யார் என்னவள் ?
.............................................................................

யார் என்னவள் ?



அழகான பெண் அவள்

வாசிக்காத கவிதை அவள் ...


கண்ணுக்கு தெரியாத காற்று அவள்


என் கவிதைகளுக்கான ஊற்று அவள்

கனவினை தினம் காட்டுபவள்


என்னை எனக்கு காட்டியவள்


என் உலகம் அவளே


என்று உணர்ந்ததாலே


என்னவள் என்கிறேன்

தினம்அவளைதேடிகொண்டே
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

உன் புன்னகை

புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை
உன் அன்பும் தான் நீங்காத
உன் இதய சிறை தந்துவிட்டது .....
தவித்து முழித்தால்
குழந்தை ஆக்கி என் வயதையும் கொன்றுவிட்டது .... ...
தத்தி தவழும் என்னக்கு
நடை கற்று கொடு
உன் மெலிய விரல் கொண்டு ...
இல்லை என்றால் அழுவேன் .....
ஆசை முத்தம் தர வேண்டும்
என் அழுகை நிறுத்த .....
என்ன செய்ய போகிறாய் .....
**************************************************
யுத்தம்

சத்தமில்லை
நித்தமில்லை!
அனால்...
யுத்தமுண்டு உன்
நினைவுகள் என்னில்
மோதுவாதால்!

**************************************************



 கண்கள்

என்னை கைது செய்ய என்னதான் ஆசையோ!!......
என் காதலியின் கண்களுக்கு!!.............

 
 
 
 
 
 
 
 
 
 
 
**********************************************************************************
கற்றுக் கொடுத்தாய்...!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அதிகாலையில் பூக்களில் படியும் பனித்துளியை


ரசிக்க கற்றுக் கொடுத்தாய்...!
பூத்துக்குலுங்கும் புன்னகை மலர்களில்


வசிக்க கற்றுக் கொடுத்தாய்...!


சாலை ஓரக்கடைகளின் தேநீரை
ருசிக்க கற்றுக் கொடுத்தாய்...!             


அகத்தில் எழும்


ஆற்றாமைகளை


அளிக்க கற்றுக் கொடுத்தாய்...!


நீ தானடி என் தேவதை...!

கருத்துகள் இல்லை: