திங்கள், 9 ஆகஸ்ட், 2010

குட்டிக் கவிதை

குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள்
கடந்தபோதும் மறுபடி
குழந்தையாய் உன்னைக்
கேட்டு அடம்பிடிக்கிறேனே
நான்..........!

யாருக்கும் செவி
சாய்க்காது
எப்படியோ இருந்த
என்னை
இருந்தால் இப்படித்தான்
இருக்க வேண்டும்
என என்னை செதுக்கிக்
கொண்டிருக்கிறாயே............!


ஊமை நாடகம் போட்டாலும்
கண்கள் காட்டி கொடுத்துவிடும்
எனக்கு
அப்படி பாக்காதே
கண்கள் இரண்டிலும்
கத்தியை வைத்துக்கொண்டு.......!


எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் வாழ்கையின் பாதையில் ஒருவரை ஒருவர் சந்தித்தோம், பிரிவுகள் இருந்தாலும்,நாம் பிரியாத அன்பு கொண்டு இருப்போம்....!


உன் இதயத்தில் இடம் பிடிக்க பல பேர் உண்டு... ஆனால் நான் உன் இதயத்தை திருப்பி கொடுத்தால் மட்டுமே அந்த பலருக்கும் இடமுண்டு...! My Dear Friend...!

இன்று .....
உன்னிடம் ஏன் இவ்வுளவு எதிர்பார்ப்பு எனக்கு ???
புரியவில்லை
எனக்குத் தெரியவில்லை???
முடிந்தால்
உனக்கு தெரிந்தால்
சொல்லிவிட்டு போ
என்னதான் நடக்கிறது என்ற.............!

சர்க்கரை இல்லேன்னா காபி வீண்.

காதல் இல்லேன்னா வாழ்க்கை வீண்.

நிலவு இல்லேன்னா வானம் வீண்.

நீ இல்லேன்னா...

மிருகக் காட்சி சாலை வீண்.

தயவுசெஞ்சு திரும்பிப் போயிடு செல்லம்...........!


i am for u

பிரியமான தோழி
அன்பில் என் குழந்தையாக...
என்றும் மாறாத நட்புடன்
இறுதிவரை
என் நண்பனாக...
இல்லையென வருந்தும் போது
நான் இருக்கிறேன் என
உணர்த்தும் - சகோதரனாக
நீ வேண்டும்.....!


உன்னை நான் நேரில் பார்த்தது இல்லை.. ..
ஆனால் பல நாள் பழகியது போன்ற உணர்வு..
உன் உள்ளம் அன்பால் நிறைந்துள்ளது..
பிறருக்காக சிந்திக்கிறது..
வாழ வேண்டும் நீ
பல்லாண்டுகள் தோழா..!


முதல் காதலை அடைய
முயற்சிக்கும்போது
அதற்குறிய தகுதி
நம்மிடம் இருப்பதில்லை..

எல்லா தகுதிகலையும்
அடைந்துவிட்டபிறகு
முதல் காதல்
கிடைப்பதில்லை...!


ஆமாம்...
இதெல்லாம் ஒரு பொழப்பா?
ஏன்ய்யா இப்படி அடுத்தவன் பிகருக்கு அலையறீங்க?
உங்க பிகரை வேற எவனாவது ஓட்டிட்டுப் போயிறப்போறான்!...
போங்கடா போகும்போது பொருள விட்டுட்டு போங்கடா, உசிர விட்டுட்டு போகாதிங்க......!





உன்னுடன் இருக்கையில்
மகிழ்ச்சியும்,
ஆனந்தமும்,
கேலியும்,
குறும்பும்,
வாதமும்,
கோபமும்,
சோகமும்,
பரிமாற்றமும்
நம்மிடையே நேசம் என்னும் கயிற்றில்
ஊஞ்சல் கட்டிக் கொண்டு ஆடும்..


சகோதரன்..
அப்படி ஒரு உறவு நம்மிடம் இருந்திருந்தால்
என் பெற்றோறும் என்னிடம் கண்டிராத வலிகளை
உன்னிடம் கொடுத்திருக்க மாட்டேன்..
நீ சகோதர உறவோடு இலவச இணைப்பாய் கிடைத்த தோழன்



இனிதே கிடைக்கும் இன்பத்தை விட ..
போறாடி தோற்கும் வலி திடமானது .......


வெற்றி என்பது எளிதல்ல ..
தோல்வி என்பது நிலையல்ல .....


போதை அற்று வாழ் .. ஆனால்
பேதை அற்று வாழதே ................
உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................!


ஏய்
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!


"சும்மா கொடுத்தா எதயுமே இழிச்சிகிட்டே வாங்குற பரம்பரையில பொறந்துட்டோம் என்ன பன்றது."


இதயத்தில் இடம் கொடுப்பவர்கள்...Lovers. இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள்... Friends...........!


நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர‌
வேறொன்றுமில்லை............!

தவறான பாதையில் வேகமாக செல்வதை விட...
சரியான பாதையில் மெதுவாக செல்...
அதிவே உன் வெற்றிக்கு முதல் படி...
-மகாத்மா காந்தி-


பெருசா ஒரு சண்டை...
but...
குட்டிய ஒரு sorry...
சின்னதா ஒரு கோவம்...
செல்லமா ஒரு சிரிப்பு...
கொடுமையா ஒரு பிரிவு...
but...
இனிமையா ஒரு சந்திப்பு...
அதுவே ஒரு நல்ல நட்பு...........!

"நட்பு" என்பது


"நட்பு" எண்பது கரும்பலகை அல்ல

அளித்து அளித்து எழுதுவதற்கு...

அது "கல்வெட்டு" ஒரு முறை எழுதினால்

அளிக்க முடியாது...
அதுவே நல்ல நட்பாகும்

தோற்றவனாய் நீ


மற்றவன் சொல்படி
வாழ்க்கை வாழ்ந்து
முடிந்துபோகையில்
உன்
சொந்த வாழ்க்கை
...உன்னைப் பார்த்து
"என்னை ஏன் வாழ மறந்தாய்?"
என்று கேட்கையில்
மற்றவன் இருக்கமாட்டான்.
தோற்றவனாய் நீ
நிற்பாய்!
~.....!**((சாம்))***

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

உன்னில் என் அன்பு,,,,,,,,

அன்பே
என் கவிதையின் வரிகள்

காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான

அன்பை கொண்டு எழுதுகிறேன்,,,,
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்,,,,,,,,,
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்,,,,,,,
எழுதிய கவிதையை மறந்து விடாதே...,,,,,,,,
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி விடாதே,,,,,,

என்றென்றும்,,,,,,,,,

நண்பனே வாழ்கை பயணத்தில்
உன் நடைகள் தூரமாகி போகலாம்,,,,
ஆனால்,,,,,,,,
என்றும் உன் நடையை சுற்றும் நிழலாக
நான் இருப்பேன்,,,,,,,
நம் வாழ்வின் இறுதிப் பயணம் வரை,,,,,,,

உனக்காகவே


கரையில் நீ வரைந்த உன் பெயரை
அலைகளாய் வந்து அள்ளிசெல்வேன் நான்,,,,,,,,,,,,,
என் மனம் எனும் ஆழ்கடலில் வந்து தேடிப்பார் ,,,,,,,,,,,
உன் பெயர் பதித்த மணல்கள் ,,,,,,,,,
சிட்பிக்குள் மின்னிக்கொண்டிருக்கும் முத்து முத்தாக,,,,,,,,

பிரிவின் வலி

உன்னோடு நான் பல தூரம் சென்றாலும்
என் கால்களில் வலி இல்லை,,,,,,,,,,,,
நெடு நேரம் சிரித்தாலும்
புன்னகைக்கு ஓய்வில்லை.............
ஆனால் புறப்படுகிறேன் என்று நீ சொல்லும்போது
மட்டும், விடை கொடுக்க
என் இதழ்களுக்கு வலிக்கிறதே ,,,,,,,,,,,,,,,,,,,,,
பிரிவின் வலி இதழ்களும் அறியுமோ ???