ஒரு சொல் கவிதை
உன் பெயர் ........!!
நகைகளில் தேடிப்பார்க்கிறேன்
புதிதாய் பூத்த ஒருநகை
உன் புன்னகை .....!!
வைரம் ஒளிர்வதை பார்க்கிறேன்
வசந்தம் விசிடும்
உன் விழிகள்....!!
அழகிய பூவை பார்க்கிறேன்
அதிலே தெரிவது
உன் முகம் ....!!
உன் காலடித்தடங்களை சேர்க்கிறேன்
அதிலே தெரியுது
என் வழி ...!!
என்னில் உன்னைப் பார்க்கிறேன்
உன்னில் தெரியுது
என் உயிர்...!!