காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 பிப்ரவரி, 2011

சுகமாய்


காதல் சுகமானது
உன் பெயர் சொல்லி
அழைக்கும் போது....
கண்கள் மூடி
தவிக்கும் போது தான்
தெரிகிறது
காதல் தவறில்லை என்று....

வேர்கள் இல்லாத
தாவரங்களா?...
காம வேர்கள் இல்லாத
நட்பும் இல்லை
காதலும் இல்லை...
வேர்கள் வெளியில்
தெரிந்தால்
இறந்து போகும்
என்றே
புதைந்து கிடக்கின்றன
நம்முள்.....

வேர்களை
ஒளித்து
மறைத்து
காதல் செய்கிறேன்
சுகமாய்
என்னுள்..

புதன், 25 ஆகஸ்ட், 2010

அழகான காதல்

நீ விலகியதில்
என் காதலுக்கு உன் மேல் வருத்தம்!
மீண்டும் நீ வந்ததும்
அத்தனை வருத்தங்களும் அரைநொடியில் மாறிப் போயின…
அழகானக் காதலாய்!
(((((((((((சாம் )))))))))

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

புரிந்தது

எனக்கும் உனக்கும்
நிறைய
கருத்து வேறுபாடுகள்....
நாம் பிரிந்து போவதே
நலம் என்று
நானும் நீயும்
ஒப்பந்தம் போட்டு பிரிந்தோம்
அதி மேதாவிகளாய்....
பின்பு தான்
புரிந்தது
இந்த உலகில்
ஆணும் ஆணும் ,
பெண்ணும் பெண்ணும்
சேர்ந்து வாழ்வது
எப்படி
இயற்கைக்கு மாறானதோ
அது போல் தான்
நேர் ,எதிர்
இணைவது இல்லறம்
என்கிறார்கள்
அனுபவித்தவர்கள்....
இன்று காத்திருக்கிறோம்....
உன் அழைப்பிற்காக நானும்
என் அழைப்பிற்காக நீயும்

உன் நிலை சொல்லடி?.....

என் வலிகள்
சொல்ல முடியவில்லை ......
உன்னை விட்டு
பிரிந்து விடுவேனோ
என்ற பயம்
என்னை
உறங்க விடாமல் செய்கிறது....
ஏனடி
இத்தனை அவஸ்தைகள்....
உன்னிடம்
என் அன்பை புரிய வைக்காமல்
தவிப்பது கொடுமையாய்
இருக்குதடி...
உன் நிலை சொல்லடி?.....

ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஒடோடி வா

என் இமைகள் உறங்கிய போது கூட
உன் நினைவுகள் உறங்கவில்லை,,...!

என்னையே நான் மறந்த போது கூட

உன்னை நான் மறக்கவில்ல ........!

அன்பே

ஏன் இந்த நிசப்தம்

துடிக்கும் என் இதயம்

நிற்கும் முன் என்னிடம்

ஒடோடி வா.............!

கண்ணே ...........!

ஒற்றை வரியில்


பக்கம் பக்கமாய்
கவிதை எழுத தெரிந்த
எனக்கு ..
ஒற்றை வரியில் சொல்ல
முடிய வில்லை
உன் அழகை

உனைப்போல்


எல்லாக் கவிதைகளும்

உன்னைப் பற்றியவை

தானேனிலும் ......

ஒரு கவிதைகளும்

உன்னைப் போல்

இல்லையே..............